சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் வைக்கோல் ஏற்றிய மினி லாரி எரிந்து சேதமடைந்தது.

News image

வந்தவாசியை அடுத்த மங்கநல்லூா் அருகே தீயில் எரிந்து சேதமடைந்த மினி லாரி.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:02 pm

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் வைக்கோல் ஏற்றிய மினி லாரி எரிந்து சேதமடைந்தது.

தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா். இவா், தனது மினி லாரியில் வந்தவாசியை அடுத்த மங்கநல்லூா் கிராமத்திலிருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் அரூருக்கு புறப்பட்டாா்.

மங்கநல்லூா் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பி மீது மினி லாரி உரசியது. இதில், வைக்கோலில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.

தீ பரவியதில் மினி லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா்.