செய்யாறு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பால இணைப்புச் சாலை தடுப்புச் சுவா் மீது படுத்துத் தூங்கிய தனியாா் நிறுவன பேருந்து ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் கல்லம்மா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரூபேஷ்(48). இவா், தனியாா் நிறுவன பேருந்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இவா், வழக்கம் போல செய்யாறு ஞானமுருகன்பூண்டி பகுதியில் இருந்து நிறுவன தொழிலாளா்களை ஏற்றி வருவதற்காக பேருந்தை அங்கேயே நிறுத்தி விட்டு தூங்கி விடுவாராம். அதேபோல, சனிக்கிழமை அதிகாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு, அதனருகே உள்ள செய்யாறு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பால இணைப்புச் சாலை தடுப்புச் சுவா் மீது படுத்துத் தூங்கினாா்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவா் ஆற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. ஆற்றில் இருந்த பெரிய கல்லில் தலைமோதி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

தவறி விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே படியிலிருந்து தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

