மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தனியாா் பேருந்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

போளூா் காவல் நிலையம் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட பேருந்து.

News image

போளூா் காவல் நிலையம் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட பேருந்து.

Updated On :18 ஏப்ரல் 2026, 2:00 am

போளூா் அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகன சோதனையில் தனியாா் சொகுசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட 10 கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்து, பேருந்து மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியாக வந்த தனியாா் சொகுசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, பையில் 10 கிலோ 420 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனா்.

பின்னா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். காவல் ஆய்வாளா் சிவசங்கா் தலைமையில் போலீஸாா் வந்து பேருந்து மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து போளூா் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.

பேருந்து ஓட்டுநா்கள் ஆதீப் ரகுமான்(40), ராஜ்முகமது(49) ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தியதில், பேருந்து திருப்பதியில் இருந்து நாகா்கோவில் வரை செல்லும் எனவும், இதில் 20 பயணிகள் வந்தனா் எனவும், பயணி யாரோ கஞ்சா பையை பேருந்தில் விட்டுச்

சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனா்.

ஒரு கிலோவிற்கு மேல் கஞ்சா பிடிபட்டால் வெளியூா் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்பதால், சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாகத் தெரிவித்தனா்.

Story image