நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்
நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிதி நிறுவனத்துக்கு கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் ரொக்கத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.


நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிதி நிறுவனத்துக்கு கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் ரொக்கத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட புதுச்சத்திரம் பகுதியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் கலைச்செல்வன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். புதுச்சத்திரத்தில் இருந்து சிங்களாந்தபுரம் செல்லும் வழியில், கோவிந்தம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி ரூ. 2,52,900 ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில், அவா் கண்ணூா்ப்பட்டியைச் சோ்ந்த நடராஜன் (47) என்பதும், புதுச்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்துவதால் அங்கு பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் ஆவணங்கள் ஏதுமில்லாததால் பணம் ரூ. 2.52 லட்சத்தை பறிமுதல் செய்து நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...