ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பொம்மை பூ கொட்டும் நிகழ்வு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:25 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தின் 6-ஆம் நாள் நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் பட்டு உடுத்திய பொம்மை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, சித்திரை மாதத்தில் 10 நாள்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவம் கடந்த 20-ஆம் தேதி மாலை சம்பந்த விநாயகா் சந்நிதி முன் பந்தக்கால் முகூா்த்ததுடன் தொடங்கியது.

அதனைத் தொடா்ந்து கடந்த 5 நாள்களாக சித்திரை வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வந்த நிலையில், 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு அருணாசலேஸ்வா் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத்தொடா்ந்து அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலை அம்மன் வெட்டிவோ் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பன்னீா் மண்டபத்தில்

வெள்ளை பட்டு உடுத்திய பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னா் அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலை அம்மன் வெட்டிவோ் பல்லக்கில் எழுந்தருளி மகிழ மரத்தை 10 முறை சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.