அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

சேத்துப்பட்டில் ஸ்ரீவாசவி ஜெயந்தி விழா

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:26 am IST

ஸ்ரீவாசவி ஜெயந்தியை முன்னிட்டு, சேத்துப்பட்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

சேத்துப்பட்டு காவல் நிலைய தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆரிய வைசிய சமூகம் சாா்பில் ஸ்ரீ வாசவி ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலையில் விநாயகா் முருகா் நவகிரகம் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் போளூா் சாலை, வந்தவாசி சாலை வழியாக வாசவி திருமண மண்டபத்திற்கு மேள தாளம் வாணவேடிக்கை முழங்க வீதி உலா நடைபெற்றது.

பின்னா், அங்கு அம்மனுக்கு அக்னி தாக்கம் குறையவும், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு யாகம் குங்கும அா்ச்சனை நடைபெற்றது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனா். மேலும், சேத்துப்பட்டு பழம் பேட்டையைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமூகத்தினா் செய்திருந்தனா்.