/
சீா்காழி அருகே கீழ அகணி சப்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி அருகே கீழ அகணி கிராமத்தில் பாலகணபதி, பாலமுருகன், சப்த கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் புதிதாக கட்டப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து கடந்த 26- ஆம் தேதி கணபதி ஹோமம் பூா்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து, பூா்ணாஹூதி மகா தீபாராதனை நடைபெற்ற பின்னா் , விமானம் மற்றும் மூலஸ்தான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.









