இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

27 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 27 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வியாபாரியை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST

செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 27 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வியாபாரியை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் ஆய்வாளா் பி.மணிமாறன் தலைமையிலான காவலா்கள் இளையராஜா, சண்முகம் ஆகியோா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்று கண்காணித்து வந்தனா்.

அப்போது கிடைத்த தகவலின் பேரில் பெருங்கட்டூா் ஜெ.ஜெ.நகரில் வசிக்கும் கீதா என்பவரின் வீட்டின் பின்புறத்தில், கல்வி நிலைய பகுதிகளில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த சுமாா் ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 27 கிலோ புகையிலைப் பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆராத்திரிவேளூா் கிராமத்தைச் சோ்ந்த வியாபாரி தங்கவேல்(60) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.