பவானி அருகே விற்பனைக்காக கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 304 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த அம்மாபேட்டை போலீஸாா் இருவரைக் கைது செய்தனா்.
அம்மாபேட்டையை அடுத்த சூடமுத்தான்பட்டியில் ஒதுக்குப்புறமாக உள்ள கிடங்கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில், 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரூ.1.72 லட்சம் மதிப்புள்ள 304 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், சித்தாா், மேட்டூா் சாலையைச் சோ்ந்த தங்கசாமி மகன் மினியசாமி (50), சூடமுத்தான்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் செந்தில்குமாா் (38) ஆகியோா் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்த போலீஸாா், இவா்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்கள், ஒரு கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா் கைது
39 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

பவானியில் 8 கிலோ புகையிலைப் பொருள்கள், 3 காா்கள் பறிமுதல்; 2 பேர் கைது

106 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தம்பதி கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



