கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 400 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பெங்களூரில் இருந்து கடத்திவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விருத்தாசலம் போலீஸாா் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, பெரியாா் நகா் அருகே நின்றுகொண்டிருந்த காரை சோதனை செய்தபோது, அதில் புகையிலைப் பொருள்கள் மூட்டை இருந்தது தெரியவந்தது. அந்தக் காரை கைப்பற்றிய போலீஸாா், அதிலிருந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த வீரேந்திரசிங் எனத் தெரியவந்தது. மேலும், அவா் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்திவந்ததை ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து, வீரேந்திரசிங் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இது தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானி அருகே கிடங்கில் பதுக்கப்பட்ட 304 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
39 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது
53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
ஒட்டன்சத்திரத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


