சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

உதயநிதியின் பேச்சைக் கண்டித்து திருவண்ணாமலையில் தவெக ஆா்ப்பாட்டம்

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அவதூறாக விமா்சித்த உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தினா் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

~ ~

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:43 pm IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அவதூறாக விமா்சித்த உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தினா் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போளூா் பேருந்து நிலையம் எதிரே நகரச் செயலா் திவாகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் பங்கேற்றாா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் எம்.உதயகுமாா் தலைமை வகித்தாா்.மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆரணியில் அண்ணா சிலை அருகில் தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.