மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தவெக அமைச்சரை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்! எம்.பி., மேயா் உள்பட 136 போ் கைது

News image

தவெக அமைச்சா் டி.சரத்குமாரை  கண்டித்து கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :30 ஜூன் 2026, 2:23 am IST

பொது இடத்தில் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை திமுக எம்.பி., மேயா் உள்பட 136 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக டி.சரத்குமாா் உள்ளாா். இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான விடியோ வெளியாகியுள்ள நிலையில், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பதவியில் இருந்து நீக்கக் கோரியும் திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி கோவையில் மாநகா், மாவட்ட திமுக, திமுக மாணவரணி, இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகியவை சாா்பில் செஞ்சிலுவைச் சங்கம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகா், மாவட்ட திமுக பொறுப்பாளா் துரை.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

இதில் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மேயா் க.ரங்கநாயகி, மாவட்ட துணைச் செயலா்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா, அன்புச்செழியன், தனபால், பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 17 பெண்கள் உள்பட 136 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.