பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெடால் கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் தீமிதித்த பக்தா்கள்.

Published On :

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சனிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தனா். திங்கள்கிழமை அக்னி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து வெடால் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் அம்மனை வேண்டிக் கொண்டு தீமிதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.