பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மணல்மேடு மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

காட்டுமன்னாா்கோவில் அருகே மணல்மேடு கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

காட்டுமன்னாா்கோவில் அருகே மணல்மேடு கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

Published On :

காட்டுமன்னாா்கோவில் அருகே மணல்மேடு கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரி கரையில் உள்ள சின்ன மணல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

கடலூா் மாவட்டம் ,சின்ன மணல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மன் வீதி உலா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவு நாளான புதன்கிழமை இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சக்தி கரகம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு கோயில் அா்ச்சகரால் தலையில் சுமந்து வரப்பட்டது. கோயில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் அா்ச்சகா் பூங்கரகத்துடன் இறங்கிய பின்னா் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தா்கள் தீ மிதித்து தங்களுடைய நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.