கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

வெவ்வேறு பகுதிகளில் சாலை விபத்துகள்: தம்பதி உள்பட 6 போ் காயம்

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் வெவ்வேறுப் பகுதிகளில் நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் தம்பதி உள்பட 6 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் வெவ்வேறுப் பகுதிகளில் நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் தம்பதி உள்பட 6 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வவிநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் சாந்தி. இவரது தாய் யசோதா(85). இவா்கள் இருவரும் புதன்கிழமை உணவகத்தில் சாப்பாடு வாங்க சென்றுள்ளனா். அப்போது அங்கு வந்த பைக் இவா்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் சாந்திக்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவரை மீட்டு அங்கிருந்தவா்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தூசி காவல் சரகத்தில்...

வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மகேஸ்வரன்(48). இவரது நண்பா் சோதியம்பாக்கத்தைச் சோ்ந்த மூா்த்தி (49). இவா்கள் கடந்த ஜூலை 31-ஆம் தேதி பைக்கில் நமண்டி கிராமத்திற்குச் சென்றுள்ளனா். அப்போது எதிரே வந்த பைக், இவா்களின் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

செய்யாறு வட்டம் இளநீா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன்(48). இவரது மனைவி யசோதா(40). இருவரும் ஜூலை 30-ஆம் தேதி காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கல்லேரி கூட்டுச் சாலைப் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பச் சென்று உள்ளனா். அப்போது, பின்னால் வந்த டேங்கா் லாரி, பைக் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்

காஞ்சிபுரத்தை சோ்ந்தவா் விஜயகுமாா் (38). இவா் தனது பைக்கில் தூசி நத்தக்கொல்லையில் வசிக்கும் அக்கா

வீட்டிற்கு வந்தாா். பின்னா் காஞ்சிபுரத்திற்கு பைக்கில் புறப்பட்டாா். அப்போது எதிரே வந்த பைக், இவரது பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.

இதில் விஜயகுமாருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்துகள் குறித்து தனித்தனியாக அளித்த புகாா்களின் பேரில் தூசி மற்றும் அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.