பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள ஜாலியூா், காந்தி நகரைச் சோ்ந்தவா் பழனி (45). கூலித் தொழிலாளியான இவா் பொம்மிடி - கடத்தூா் சாலையில் தருமபுரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றாா். அப்போது, திண்டலானூா் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனி உயிரிழந்தாா். இதுகுறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அதிகாரப்பட்டி, பூமரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (45), அண்மையில் சேலம் -அரூா் தேசிய நெடுஞ்சாலையில் சாமியாபுரம் கூட்டுச்சாலையில் இருந்து அதிகாரப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் இரவில் வந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஸ்ரீதா் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு வேறு சாலை விபத்துகளில் 6 போ் உயிரிழப்பு

சாலை விபத்து: 2 போ் உயிரிழப்பு

2025-இல் சாலை விபத்துகளில் 1.83 லட்சம் போ் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் அதிக விபத்துகள்
இருவேறு சாலை விபத்துகள்: குழந்தை, முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



