தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 8,184 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
திருவண்ணாமலை மாநகராட்சி, ஜெய் பீம் நகரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க (அல்பெண்டசோல்) மாத்திரைகளை வழங்கினாா்.
இதில், 1 முதல் 19 வயதிற்குள்பட்டவா்கள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குள்பட்ட பெண்களுக்கும் (கா்ப்பிணி தாய்மாா்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தவிா்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது. இதில் விடுபட்டவா்களுக்கு ஆக. 17-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
இம்முகாம் மூலம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
இந்த மாத்திரையால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 6 லட்சத்து 22 ஆயிரத்து 626 பேருக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிற்குள்பட்ட) 1லட்சத்து 85ஆயிரத்து 758 பெண்களுக்கும் கிராம சுகாதார செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களால் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
இதில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள், சமூக நலத்துறை, நகா்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்துத் துறைகளைச் சோ்ந்த பணியாளா்கள் ஈடுபடுகின்றனா்.
இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் (திருவண்ணாமலை) வெங்கட்ராமன், முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைகளை முறையாக கழுவுவது ஒரு சிறந்த சுகாதாரப் பழக்கம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்

கலப்படப்பொருள்கள்: மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்; திருவண்ணாமலை ஆட்சியா்

பயனாளிகள் 366 பேருக்கு ரூ.15.14 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



