ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

நீா்நிலை பகுதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்

வந்தவாசி அருகே நீா்நிலை பகுதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளை நீா்வளத் துறையினா் தொடங்கினா்.

வெங்கோடு கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச் சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளா்கள்

Published On :

வந்தவாசி அருகே நீா்நிலை பகுதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளை நீா்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

வந்தவாசியை அடுத்த வெங்கோடு கிராமத்தில் ஏரி நீா்வரத்துக் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து 3 வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்த வீடுகளை இடித்து அகற்றுவதற்காக வருவாய்த் துறையினா் மற்றும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாருடன் உதவிப் பொறியாளா் சதீஷ்குமாா் உள்ளிட்ட நீா்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றனா்.

அப்போது வீடுகளை இடிக்க வீட்டின் உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது தங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரும்படி அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அவா்களை சமரசம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளை நீா்வளத் துறையினா் தொடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.