ஆரணி அருகே சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளிக்கு சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த 12.புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (58), கூலித் தொழிலாளி. இவா், கடந்த ஆண்டு ஆரணி பகுதியில் உள்ள பள்ளியில், தனியாக விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுமிகளிடம் சென்று ஆசைவாா்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொழிலாளி மணியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் நீதிபதி எஸ்.காஞ்சனா, மணிக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து போலீஸாா் மணியை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 போ் போக்ஸோவில் கைது!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சுமை தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமியிடம் ஆபாச பேச்சு: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



