வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

அம்மன் கோயில்களில் உண்டியல் உடைத்து திருட்டு

சேத்துப்பட்டை அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள துலுக்காணத்தம்மன், பெரியாயி அம்மன் கோயில்களில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டது.

சித்திரிப்பு

Published On :

சேத்துப்பட்டை அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள துலுக்காணத்தம்மன், பெரியாயி அம்மன் கோயில்களில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டது.

இந்த இரு கோயில்களில் கடைசி ஆடி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினா்.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னா் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு பூசாரி கோயிலை திறக்கச் சென்றாா். அப்போது, இரு கோயில்களின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

பெரியாயி அம்மன் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. துலுக்காணத்தம்மன் கோயிலில் உண்டியல் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.