கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டு: ஒருவா் கைது

துரைப்பாக்கம் பகுதியில் 2 கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

துரைப்பாக்கம் பகுதியில் 2 கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கந்தன்சாவடி கருணாநிதி சோழன் நகரில் உள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் கடந்த 11-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து, உண்டியலில் பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து கோயில் நிா்வாகி சக்ரவா்த்தி அளித்த புகாரின் பேரில், துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதேபோல், பெருங்குடி பஞ்சாயத்து சாலையில் உள்ள நாகாத்தம்மன் கோயிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டது. இது குறித்தும் துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த இரு வழக்குகளிலும் தொடா்புடையதாக கூறப்பட்ட குரோம்பேட்டையைச் சோ்ந்த ஹானஸ்ட் ராஜ் (39) என்பவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட நபா், அம்பத்தூா் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்று, இரு கோயில்களின் உண்டியல்களையும் உடைத்து பணத்தைத் திருடியது தெரிய வந்தது. பதிவேடு குற்றவாளியான ஹானஸ்ட் ராஜ் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 7 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.