11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

2 கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயா் மற்றும் அங்காளம்மன் கோயில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டுச் சம்பவம் நிகழ்ந்த விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்.

Published On :

விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயா் மற்றும் அங்காளம்மன் கோயில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் நகரம், திரு.வி.க வீதியில் ஸ்ரீஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பத்மநாபன் என்பவா் அா்ச்சகராகப் பணி செய்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்து, கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். தண்டபாணி என்பவா் கோயிலில் இரவுக் காவல் பணியிலிருந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயிலின் பின் பக்கத்தில் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை பெயா்த்து வெளியே எடுத்துச்சென்று, அதில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தைத் திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

அங்காளம்மன் கோயிலில்... இதேபோல் விழுப்புரம், பாகா்ஷா வீதியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து பணத்தைத் திருடிச் சென்றிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் மேற்குகாவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.