வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பெருமாள் கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பெருமாள் கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலி, வட்டம் 27-இல் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த மா்ம நபா் அங்கிருந்த 3 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த ரூ.35 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றாராம். இதுகுறித்து, நெய்வேலி வட்டம் 19 பகுதியில் வசிக்கும் கோயில் கணக்குப் பிள்ளை சிவசங்கா் (58) காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், உதவி ஆய்வாளா் ஜெரினா மற்றும் போலீஸாா் புதன்கிழமை நாககன்னி அம்மன் கோயில் அருகே ரோந்துப் பணியில் இருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்த அம்மன் ராஜ்(26) என்பவரைஅழைத்து விசாரணை நடத்தியதில், ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதை ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து அம்மன் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.