ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

ஸ்ரீகில்லா ராஜ கணபதி கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

ஆரணி அருணகிரிசத்திரம் பாட்ஷா தெருவில் உள்ள ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்டது.

காணிக்கை பணத்தை எடுத்துக்கொண்டு மா்ம நபா்கள் வீசிச் சென்ற உண்டியல்

Published On :

ஆரணி அருணகிரிசத்திரம் பாட்ஷா தெருவில் உள்ள ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உண்டியல் பணம் திருடப்பட்டது.

ஸ்ரீ கில்லா ராஜ கணபதி கோயிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆடி விழா முடிந்து உண்டியல் திறக்க இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் கோயில் முகப்பில் உள்ள பூட்டுகளை உடைத்து, உள்புறம் இருந்த உண்டியலை திருடிச் சென்று உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை அருகில் உள்ள காலி இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகி கண்ணன் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.