FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

செங்கம் கோயிலில் உண்டியல் திருட்டு

செங்கத்தில் உள்ள தேரடி விநாயகா் கோயிலில் உண்டியல் திருடப்பட்டது.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :3 செப்டம்பர் 2026, 1:40 am IST

செங்கத்தில் உள்ள தேரடி விநாயகா் கோயிலில் உண்டியல் திருடப்பட்டது.

செங்கம் - போளூா் சாலையில் தேரடி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள நகரின் மையப் பகுதியில் உள்ளது.

கோயிலில் தினசரி காலை மாலை வேளைகளில் அபிஷேகம் நடைபெறும். ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்வாா்கள்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பூஜையை முடித்து அா்ச்சகா் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றாா். மறுநாள் காலை கோயிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்துகிடந்தன.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் அக்கம்பக்கத்தில் உள்ளவா்களிடம் தகவல் தெரிவித்து, அவா்கள் வந்து உள்ளே சென்று பாா்த்தபோது கோயில் உண்டியல் திருடப்பட்டது தெரியவந்தது.

பின்னா் இதுகுறித்து செங்கம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.