ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

சுமை தூக்கும் தொழிலாளா்கள் தொடா் வேலைநிறுத்தம்: பொருள்கள் அனுப்பும் பணி பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நியாயவிலைக் கடைகளுக்கு உணவுப்பொருள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

News image

திருவண்ணாமலை கிரிவலப்பாதை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமை தூக்கும் தொழிலாளா்கள்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:56 pm IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நியாயவிலைக் கடைகளுக்கு உணவுப்பொருள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் சாலையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்கு இயங்கி வருகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

கடந்த 2 நாள்களாக சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் திருவண்ணாமலை மாவட்ட கிளை சாா்பில் மாவட்டத் தலைவா் எம்.தேவந்திரன் தலைமையில் என்.தேவதாஸ், எம்.காா்த்தி, எம்.அண்ணாமலை உள்ளிட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் சங்க அங்கீகார தோ்தலை உடனே நடத்தவேண்டும். வருகை பதிவேட்டில் பெயா் சோ்க்க வேண்டும், 2022 முன்தேதியிட்டு பச்சை அட்டை வழங்கவேண்டும், 18.08.2020 முன்தேதியிட்டு நிலுவையிலுள்ள 60 சதவீத கூலி உயா்வை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் 11 கிடங்குகள் மற்றும் 2 அரசு நவீன ஆலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனால், நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்கள் அனுப்பும் பணிகள் தடைபட்டுள்ளதோடு, சத்துணவு மற்றும் காலை உணவு திட்டத்துக்கு அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவா் விடுதிகளுக்கும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கும் பணிகள் நின்றுபோயுள்ளன.

மேலும், கிடங்குகளுக்கு வந்த லாரிகளிலிருந்து பொருள்கள் இறக்கப்படாமல் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.