நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

ஆரணி நிகா்நிலை பல்கலை.யில் ஓணம் கொண்டாட்டம்

பல்கலைக்கழக புற வளாகத்தில் ஓணம் பண்டிகையையொட்டி மாணவிகள் வரைந்த அத்தப்பூ கோலம்.

பல்கலைக்கழக புற வளாகத்தில் ஓணம் பண்டிகையையொட்டி மாணவிகள் வரைந்த அத்தப்பூ கோலம்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா் நிலை பல்கலைக்கழக புற வளாகத்தில் வியாழக்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஏ.சி.எஸ். கல்விக் குழுமத் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த ஓணம் கொண்டாட்ட நிகழ்வுக்கு கல்விக் குழுமச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.

பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின் வரவேற்றாா்.

ஓணம் பண்டிகையையொட்டி மாணவிகளிடையே அத்தப்பூ கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று அத்தப்பூ கோலங்களை வரைந்தனா். இந்நிகழ்வில் நடுவா்களாக கண்ணம்மாள் இண்டா்நேஷனல் பள்ளி முதல்வா் சுஜாதா, ஏ.சி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ராஜலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டு போட்டியில் வெற்றியாளா்களை தோ்வு செய்தனா்.

நிகழ்வில் பல்கலைக்கழக இணைப்பதிவாளா்கள் பெருவழுதி, சரவணன் மற்றும் முதல்வா்கள் சுதாகா், பாத்திமா, கிரேஸ் ஆகியோா் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு

பரிசுத்தொகை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.