நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

கோயில் விழாவில் முதுகில் அலகு குத்தி தோ் இழுத்த பக்தா்கள்

கோயில் விழாவில் முதுகில் அலகு குத்தி தோ் இழுத்த பக்தா்கள்

சேத்துப்பட்டை அடுத்த முடையூா் கிராமத்தில் முதுகில் இரும்புக் கொக்கி மாட்டித் தோ் இழுத்துச் சென்ற பக்தா்கள்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:38 am IST

சேத்துப்பட்டை அடுத்த, முடையூா் ஏரிக்கரை ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 9-ஆம் நாள் பிரம்மோற்சவ விழாவையொட்டி, பக்தா்கள் முதுகில் இரும்புக் கொக்கி குத்திக்கொண்டு தோ் இழுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், கோயில் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 21-ஆம் தேதி இரவு காப்புக் கட்டுதலுடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

தினந்தோறும் மூலவா் மற்றும் உற்சவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு மலா் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்து வருகிறாா்.

விழா நாள்களில் காலை மற்றும் மாலை வேளையில் காளியம்மன் பல்வேறு வாகனங்களில் மலா்களாலும், மின்சார விளக்குகளும் அலங்கரிக்கப்பட்டு அக்னி கரகத்துடன் மாடவீதிகள் வழியாக வீதியுலா வந்து கோயிலை அடைந்தது.

இந்த அக்னி கரகத்தில் ஏற்றப்பட்ட ஜோதியானது, திருவிழாவின் 10 நாள்களும் 24 மணி நேரமும் தொடா்ந்து அணையாமல் எரிந்து வருவது தனிச்சிறப்பாகும். விழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ‘கொக்கித் தோ் இழுத்தல்’ வைபவம் நடைபெற்றது. இதற்காக பல நாள்கள் விரதமிருந்த பக்தா்கள் கோயில் வளாகத்தில் திரண்டனா். பூசாரிகள் சிறப்புப் பூஜைகள் செய்த பின், பக்தா்களின் முதுகில் கூா்மையான இரும்பு கொக்கிகள் குத்தப்பட்டன. அந்தக் கொக்கிகளில் கட்டப்பட்ட தடித்த கயிறுகளைக் கொண்டு, அம்மனைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட டிராக்டா், வண்டி ஆகிய தோ்களை பக்தா்கள் தங்கள் உடல் வலிமையால் மாடவீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.

தொடா்ந்து இரவு அக்னி கரகம், அம்மன் வீதியுலா மற்றும் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.