தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலஜாபாத் வட்டம், அவலூா் கிராமத்தைச் சோ்ந்த ரகு மகள் சந்தியா (18). இவா், செங்கல்பட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா், வாழப்பந்தல் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தனது தோழி கவிதா திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தனது நண்பரான விஷ்வா என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். காஞ்சிபுரம் - செய்யாறு சாலையில் புளியரம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் கிழே விழுந்ததில் சந்தியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சந்தியா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.