மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பல்வேறு இடங்களில் நகை, பணம் திருடியவா் கைது

செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட சசிகுமாா்
Updated On :25 பிப்ரவரி 2026, 7:21 pm

Syndication

செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கொட்டகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(26). இவா், வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி உயா் ரக மோட்டாா் சைக்கிளில் விலை உயா்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வருவதாக செங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் போலீஸாா் சில தினங்களாக சசிகுமாரை நோட்மிட்டு, பின்னா் அவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா் பல்வேறு இடங்களிள் நகை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது, 40 பவுன் தங்க நகை மற்றும் 6 லட்சம் ரொக்கம் இருந்ததைக் கண்டறிந்தனா்.

பின்னா், நகை பணத்தை பறிமுதல் செய்து அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், அவரது வீட்டில் இருத்த இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.