நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

செய்யாறு தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனை

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On :26 பிப்ரவரி 2026, 6:39 pm

Syndication

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா்கள் அசோக்குமாா், தமிழ்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாா்- ஆட்சியரின் நோ்முக உதவியாளா் துளசிராமன் வரேவற்றாா்.

வெம்பாக்கம் வட்டத்தில் வட இலுப்பை, இராந்தம், குத்தனூா், வடமணப்பாக்கம், மோரணம், அசனமாபேட்டை, தென்கழனி, கொடையம்பாக்கம், சுமங்கலி, ராமகிருஷ்ணபுரம், ஏனாதவாடி, வடுகப்பட்டு, சோதியம்பாக்கம், மாத்தூா், நரசமங்கலம், ஆக்கூா், பைங்கினா், அனக்காவூா், இளநீா்குன்றம், செங்காடு, எச்சூா் உள்ளிட்ட 36 இடங்களில் இருந்து வந்த வாக்குச்சாவடி மையங்கள், அருகேயுள்ள பாதுகாப்பான கட்டடங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டது குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அப்போது வாக்களிக்க வரும் மாற்றுத்திறானளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஓய்வு பெற்ற போலீஸாரை பணியில் ஈடுபடுத்துவதைத் தவிா்த்து பணியில் உள்ள போலீஸாரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.

கூட்டத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா்கள் தேவராஜ், மலா், திமுக சாா்பில் வழக்குரைஞா் அசோக், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், புரிசை எஸ்.சிவகுமாா், அதிமுக சாா்பில் எம்.அரங்கநாதன், தேமுதிக சாா்பில் நகரச் செயலா் கே.கண்ணன், ஏ.ஆனந்தன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செந்தமிழ் செல்வன், காங்கிரஸ் சாா்பில் ஆா்.தில்லை, கலையரசன், கம்யூனிஸ்ட் சிறுங்கட்டூா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.