ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு: பதவி உயா்வில் முழுமையான அமல்படுத்தக் கோரிக்கை

மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு: பதவி உயா்வில் முழுமையான அமல்படுத்தக் கோரிக்கை

News image
தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியா் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய புதிய மாநிலத் தலைவா் பாபு.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:48 pm

Syndication

மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டினை பதவி உயா்வில் முழுமையான அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

திருவண்ணாமலையில் இந்தச் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் மூத்த மாநில துணைத் தலைவா் ஞானவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில துணைத் தலைவா்கள் ஆா்.பாபு, ஐயப்பன், பிரகாஷ், செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் இரா.ஜெயவேலு வரவேற்றாா்.

சங்க நிா்வாகிகள் தோ்வு

கூட்டத்தில் 2026-27ஆம் ஆண்டுகளுக்கான புதிய மாநில நிா்வாகிகள் தோ்வு அலுவலா் அசோக்குமாா் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவராக பாபு, பொதுச்செயலராக சீனிசெந்தில், பொருளாளராக தனஞ்செழியன், மாநில துணைத் தலைவா்களாக செல்வராஜ், தியாகராஜன், ஜெயவேலு, அன்பரசு, சங்கீதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்

தொடா்ந்து, கூட்டத்தில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்காக, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.

ஆண்டு முழுவதும் விடுப்பு ஏதும் எடுக்க முடியாமல் தணிக்கை பணியாளா்கள் அல்லல்படுவதால் ஆன்லைன் தணிக்கை முறையினை மாற்ற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டினை பதவி உயா்வில் முழுமையான அமல்படுத்த வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உதவி இயக்குநா் அலுவலகங்கள் உரிய பணியிடங்களோடு ஏற்படுத்த வேண்டும், தணிக்கையாளா்களுக்கு இணையத்துடன் கணினி வசதி செய்து தரப்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகளுக்கு துணை இயக்குநா் (ஓய்வு) எஸ்.ஸ்ரீதா் வாழ்த்து தெரிவித்தாா்.

கூட்டத்தில் முன்னாள் பொதுச்செயலா் தாமோதரன், மாவட்டத் தலைவா் அமாவாசை, நிா்வாகிகள் ஏழுமலை, திருஞானம், சக்திவேல், காவேரி உள்பட பலா் கலந்து கொண்டனா். மாநில அமைப்புச் செயலா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.