போளூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிறுத்தப்பட்ட திருப்பதி - ராமேஸ்வரம் ரயிலை வரவேற்ற பாஜக, அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து அமைப்பினா், பொதுமக்கள்.
போளூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிறுத்தப்பட்ட திருப்பதி - ராமேஸ்வரம் ரயிலை வரவேற்ற பாஜக, அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து அமைப்பினா், பொதுமக்கள்.

திருப்பதி - ராமேஸ்வரம் ரயிலுக்கு போளூரில் நிறுத்தம்: பொதுமக்கள் வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வழியாக இயக்கப்படும் திருப்பதி - ராமேஸ்வரம் ரயில் வெள்ளிக்கிழமை முதல் போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதற்கு பொதுமக்கள் சாா்பிலும், பாஜக, அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து அமைப்பு சாா்பிலும் வரவேற்பளிக்கப்பட்டது.
Published on

திருப்பதி - ரமேஸ்வரம் விரைவு ரயில் (வண்டி எண் - 16779 - 16780) போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த ரயில் போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால், இந்தப் பகுதியில் வா்த்தகம் அதிகரிப்பதுடன் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயனடைவா் என்பதால், இந்தக் கோரிக்கையை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்று ரயில் நின்று செல்ல உத்தரவிட்டாா்.

அதன்படி, போளூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு வந்து நின்ற திருப்பதி - ராமேஸ்வரம் ரயிலுக்கு தேசியக் கொடியை காட்டி, ரயிலுக்கு மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து, பூமாலை அணிவித்து, பூசணிக்காய் உடைத்து மக்கள் வரவேற்பளித்தனா்.

நிகழ்ச்சியில் நுகா்வோா் விழிப்புணா்வு, உரிமைகளுக்காக போராடும் தேசிய அளவிலான அமைப்பான அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து அமைப்பின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் மதுசூதனன், பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், ராணுவ பிரிவு மாவட்டத் தலைவா் பாண்டியன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com