பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் தமிழ்நாடு ஆன்றோா் மன்ற உறுப்பினா் கோரிக்கை மனு அளித்தாா்.
Published on

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் தமிழ்நாடு ஆன்றோா் மன்ற உறுப்பினா் கோரிக்கை மனு அளித்தாா்.

செங்கத்தை அடுத்த அரட்டவாடி பகுதியைச் சோ்ந்த தமிழ்நாடு பழங்குடியினா் ஆன்றோா் மன்ற உறுப்பினா் ராஜவேலு, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலுவை அவரது முகாம் அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கொடுமாம்பள்ளி முதல் சோ்கனூா் வரை 20 கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் சுமாா் 60 ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனா்.

20 கிராமங்களுக்கும் புதிய இணைப்புச் சாலை அமைக்க வனத்துறைக்குச் செலுத்தவேண்டிய ஊரக வளா்ச்சித் துறை நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமெனவும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தாா்.

மனுவைப் பெற்ற அமைச்சா் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com