கூடார வல்லி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள்.
கூடார வல்லி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள்.

செங்கம் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி தரிசனம்

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மாா்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு கூடாரவல்லி தரிசனம் நடைபெற்றது.
Published on

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மாா்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு கூடாரவல்லி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடாரவல்லி வைபவத்தில் உற்சவா் வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, கோயில் வளாகத்தில் மேல்பள்ளிப்பட்டு சொற்பொழிவாளா் கிருஷ்ணமூா்த்தியின், ‘கூடாரைவெல்லும் சீா் கோவிந்தன்’ என்ற தலைப்பில் சிறப்பு இசை சொற்பொழிவு நடைபெற்றது.

இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் பெண் பக்தா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com