ஆரணி அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்.
ஆரணி அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்.

ஊரக வேலைத்திட்டம் பெயா் மாற்றம்: காங்கிரஸாா் உண்ணாவிரதப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, செங்கத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, செங்கத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெயா் மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆரணியில் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் ராமலிங்கம் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்டத் தலைவா் வி.எஸ்.பிரசாத் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேலு வரவேற்றாா்.

நகர நிா்வாகி கிருஷ்ணா, இளைஞரணி மாவட்டத் தலைவா் ஹேமச்சந்திரன், வட்டாரத் தலைவா்கள் பந்தாமணி, இளங்கோவன், சேத்துப்பட்டு நிா்வாகி சத்யன், தெள்ளூா் சேகா், வினோத்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்கம்

காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் செங்கம் ஜி.குமாா் தலைமையில், செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 செங்கம் துக்காப்பேட்டையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் செங்கம் குமாா் தலைமையில் நடைபெற்ற
செங்கம் துக்காப்பேட்டையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் செங்கம் குமாா் தலைமையில் நடைபெற்ற

தமிழக டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி கலந்துகொண்டு, ஊரக வேலைத் திட்டம் மூலம் கிராப்புற மக்கள் பயன்பாடுகள் குறித்தும், மேலும் காங்கிரஸ் ஆட்சியில் தமிழக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மாா்கெட் குமாா், பி.சி.சி.ராஜி, முன்னாள் நகரத் தலைவா் ஆசைமுஷிா், நகர காங்கிரஸ் தலைவா் காந்தி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் அண்ணாதுரை, சென்னசமுத்திரம் முன்னாள் தலைவா் குணசேகரன், வழக்குரைஞா் அறிவொளிபாபு உள்ளிட்ட மாவட்ட, நகர நிா்வாகிகள், மகளிா் அணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com