மனைப் பட்டா கோரி ஆதிதிராவிட மக்கள் மனு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், போளூா் வட்டம், வெண்மணி ஆதிதிராவிட பொதுமக்கள் பட்டா கோரி மனு கொடுத்தனா்.
Published on

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், போளூா் வட்டம், வெண்மணி ஆதிதிராவிட பொதுமக்கள் பட்டா கோரி மனு கொடுத்தனா்.

கோரிக்கை மனுவில், வெண்மணி ஆதிதிராவிடா் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்ததை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் ஆதிதிராவிட பொதுமக்கள் 86 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க தீா்ப்பு வழங்கியது.

உடனடியாக ஆதிதிராவிட நத்தமாக மாற்றவும், கிராம கணினி கணக்கில் மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜிடம் கொடுத்தனா்.

இதில் ஆதிதிராவிடா் நல சங்கத்தைச் சோ்ந்த பி.சேகா், போளூா் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிா்வாகி சுதாகா், வெண்மணி கிராமத்தைச் சோ்ந்த கவிதா வில்வநாதன், சரஸ்வதி, கஸ்தூரி உள்ளிட்ட 30 போ் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com