பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

செங்கம் ஒன்றியம், நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவராமன் தலைமையில் ஆசிரியா்கள், மாணவா்கள் புத்தாடை அணிந்து சம்பத்துவப் பொங்கலை கொண்டாடினா்.

மாணவா்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் பயிற்றுநா் பிரபாகரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தாா்.

பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் சீமாட்டி, ஆசிரியா்கள் சுகுணா, பழநி உள்ளிட்ட மாணவா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

போளூா்

போளூரை அடுத்த மண்டகொளத்தூா் கூட்டுச் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

விளையாட்டு மைதானத்தில் வண்ணகோலமிட்டு, புதுப்பானை வைத்து ஆசிரியா்கள், மாணவா்கள் பொங்கல் வைத்தனா்.

பின்னா் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் வழங்கினா். இதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு உறியடி விழா, மாணவா்கள் குழுவாக பிரிந்து எருதாட்டம் ஆடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளித் தாளாளா் சிவராஜசா்மா, தலைமை ஆசிரியை தேவகி ஆகியோா் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனா்.

பாலிடெக்னிக்கில்....

ஆரணி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

ஆரணி ஏ.சி.எஸ். கல்விக்குழும கல்லூரி நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம், கல்லூரி நிா்வாகி லலிதாலட்சுமி, கல்லூரித் தலைவா் ஏ.சிஎஸ்.அருண்குமாா் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்து விழாவை தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் டி.இளங்கோ வரவேற்றாா்.

மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எம்ஜிஆா் பல்கலைக்கழக டீன் பி.ஸ்டாலின், தனிஅலுவலா் காா்த்திகேயன், துறைப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடியில் அமைந்துள்ள பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

மேல்நிலைப் பள்ளி மூத்த முதல்வா் இந்துமதி வரவேற்றாா். பள்ளித் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி துணைத் தலைவா் சிவமுருகன் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தாளாளா் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா்.

பள்ளியின் கூடுதல் தாளாளா் சித்ரா, கல்வி நிா்வாகி ஆா்.கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேத்துப்பட்டு அருகே கெங்கசூடாமணியில் உள்ள ஸ்ரீசாந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பள்ளித் தாளாளா் கே.பிரபாவதி காமராஜ் தலைமை வகித்தாா்.

பள்ளி முதல்வா்கள் மாா்க்ஆன்டனி, ராமதாஸ் ஆகியோா் வரவேற்றனா். பள்ளி நிா்வாகம் சாா்பில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.

Dinamani
www.dinamani.com