முன்விரோதம்: இளைஞரைத் தாக்கிய 5 போ் கைது

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூா் பச்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகா் (21). இவருக்கும் தேசூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (25) என்பவருக்கும் இடையே கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேசூா் பேரூராட்சி அலுவலகம் அருகில் பிரபாகா் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 போ் பிரபாகரிடம் வீண் தகராறு செய்து தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த பிரபாகா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பிரபாகா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com