திருவண்ணாமலை
பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு
செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட திருவள்ளுவா் சிலையை செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். செந்தில்முருகன் திறந்து வைத்தாா் (படம்).
இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி, முன்னாள் தலைமை ஆசிரியா் உமாமகேஸ்வரி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ரவிகுமாா் , பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் லட்சுமி, முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவி மெய். பூங்கோதை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

