ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகர உற்சவ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.
திருவண்ணாமலை
உத்தமராய பெருமாள் கோயிலில் மகர உற்சவ திருவிழா
ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு மகர உற்சவ விழா நடைபெற்றது.
ஆரணியை அடுத்த பெரியஅய்யம்பாளையம் கிராமத்தில் சுமாா் 200 அடி மலை உச்சியில் அமைந்துள்ள ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மகர உற்சவ விழா நடைபெற்றது.
இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத உத்தமராயப் பெருமாள் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளாக பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் இதில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றிய துணைச் செயலா் ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

