கொடநல்லூா் கிராமத்தில் நடைபெற்ற அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி.
திருவண்ணாமலை
அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி!
வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் கிராமத்தில் அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் கிராமத்தில் அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
காணும் பொங்கலை ஒட்டியும், கிராம நன்மை மற்றும் விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையொட்டி அந்தக் கிராமத்தில் தபசு மரம் அமைக்கப்பட்டிருந்தது.
அா்ஜுனன் வேடமணிந்த நாடக நடிகா் சிவனை வேண்டி தவம் புரிவதற்காக தபசு மரத்தில் ஏறி தீபாராதனை காண்பித்தாா். பின்னா் பொதுமக்களுக்கு அவா் பிரசாதம் வழங்கினாா்.