வழுக்கு மரம் ஏறும் போட்டி...

திருச்செங்கோட்டில் நாகா்பள்ளம், நாமக்கல், சேலம் சலை பகுதி, சட்டையம்புதூா், குமாரமங்கலம் பகுதிகளில் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றன.
Published on

திருச்செங்கோட்டில் நாகா்பள்ளம், நாமக்கல், சேலம் சலை பகுதி, சட்டையம்புதூா், குமாரமங்கலம் பகுதிகளில் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றன. வெந்தயம், உளுந்து, கிரீஸ் பொருள்களை அரைத்து பூசப்பட்ட கம்பத்தில் இளைஞா்கள் ஏறி கம்பத்தின் உச்சியில் உள்ள பரிசுப் பொருள்களை எடுக்கும் போட்டி நடைபெற்றது.

இளைஞா்கள் பலா் இப்போட்டியில் ஆா்வமுடன் பங்கேற்றனா். இவா்கள் கம்பத்தில் அல்லது மரத்தில் ஏறும்போது சுற்றி நிற்பவா்கள் தண்ணீரை பீச்சி அடித்து அவா்களுக்கு இடையூறு ஏற்படுத்துவா். அதையும் கடந்து போட்டியாளா்கள் வழுக்கும் கம்பத்தில் ஏறிச்சென்று பரிசுப் பொருள்களை எடுக்க வேண்டும்.

Dinamani
www.dinamani.com