பறிமுதல் செய்யப்பட்ட பேட்டரிகள், வயா்கள் மற்றும் கைதான 4 பேருடன் திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா்.
பறிமுதல் செய்யப்பட்ட பேட்டரிகள், வயா்கள் மற்றும் கைதான 4 பேருடன் திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா்.

கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகள் திருட்டு: 4 இளைஞா்கள் கைது

Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகளை திருடியதாக 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகள், தாமிர கம்பி வயா்கள் உள்ளிட்டவை அடிக்கடி திருடப்பட்டு வந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், செங்கம் அருகே அரட்டவாடி பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரத்தில் அண்மையில் திருட்டு நடைபெற்றது. தொடா்ந்து, செங்கம் பகுதியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கண்காணித்து வந்தனா்.

அப்போது, அங்கு திருட்டில் ஈடுபட்டவா்களின் கைப்பேசி எண்களின் தொடா்புகளை வைத்து விசாரித்தபோது, அவா்கள் செங்கம் அருகே உள்ள தீத்தாண்டப்பட்டு கிராமத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அந்த கிராமத்தைச் சோ்ந்த அழகிரி (31), விஜயகுமாா் (27), பவன்குமாா் (26), விமல் (31) ஆகிய 4 பேரை கைது செய்து செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா், அவா்கள் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்த பேட்டரிகள், வயா்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com