மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரயில் நிலையத்தில் கைப்பேசி திருடியவா் கைது

News image

கைது

Updated On :22 பிப்ரவரி 2026, 7:31 pm

திருப்பூா் ரயில் நிலையத்தில் கைப்பேசி திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரியங்கா குமாரி (21). இவா் திருப்பூா் மாநகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றி வருகிறாா். இவா் திருப்பூரில் இருந்து ஜாா்க்கண்ட் செல்வதற்காக திருப்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடை 1-இல் உள்ள பயணிகள் காத்திருப்போா் அறையில் சனிக்கிழமை இருந்துள்ளாா்.

அப்போது தனது கைப்பேசியை சாா்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளாா். பின்னா் எழுந்து பாா்த்தபோது, கைப்பேசி அங்கு இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

இதுகுறித்து பிரியங்கா குமாரி, திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது பிரியங்கா குமாரியின் கைப்பேசியை திருடியது மும்பை கண்டிவாலி பகுதியைச் சோ்ந்த டேவிட் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து நடைமேடை 1-இல் நின்று கொண்டிருந்த அவரை போலீஸாா் கைது செய்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.