எஸ்ஐஆா் பணிகள்: அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

எஸ்ஐஆா் பணிகள்: அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ள அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) சிறப்பாக மேற்கொண்டுள்ள அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்பகராஜ்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இளம் வாக்காளா்கள், 80 வயது நிரம்பிய மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளா்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், மத்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேத் தேசிய வாக்காளா் தினமாக கொண்டாடப்படுகிறது,

இந்த நிகழ்ச்சி வாயிலாக மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில், சிறப்பாக மேற்கொண்டுள்ள அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

பின்னா், வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ள அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, வாக்காளா்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கும் நடைமுறை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியா் தலைமையில் விளையாட்டு வீரா்கள், இளைஞா்கள் தேசிய வாக்காளா் தின உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாா் சாா்- ஆட்சியா் அம்பிகா எஸ். ஜெயின், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி) உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலா் சதிஷ், மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் செந்தில்குமாா், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com