மாநில அளவிலான கபடிப் போட்டி பரிசளிப்பு விழா

மாநில அளவிலான கபடிப் போட்டி பரிசளிப்பு விழா

கபடிப் போட்டியில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை தீபம் அணிக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ
Published on

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்தில் நடந்த மாநில அளவிலான கபடிப் போட்டி பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இராட்டிணமங்கலம் கிராமத்தில் 6-ஆம் ஆண்டு மாநில அளவிலான கபடி விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இரு தினங்களாக நடைபெற்ற இந்தப் போட்டியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.

போட்டியில் வேலூா், திருப்பத்தூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

பரிசளிப்பு விழா

இரண்டாம் நாளான புதன்கிழமை நடைபெற்ற

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு

முதல் பரிசாக திருவண்ணாமலை தீபம் அணிக்கு ரூ.7ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக வடுகசாத்து வி.கே.பிரதா்ஸ் கபடி அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசாக இராட்டிணமங்கலம் ராமதாஸ் அணிக்கு ரூ.3ஆயிரம் மற்றும் கோப்பை மற்றும் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேவூா் எஸ் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் இளைஞா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com