வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

முன்விரோத தகராறு: 10 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே ஏற்பட்ட முன்விரோத தகராறு தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :2 ஜூலை 2026, 12:03 am IST

வந்தவாசி அருகே ஏற்பட்ட முன்விரோத தகராறு தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வந்தவாசியை அடுத்த குறிப்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(65). கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்(47). இருவருக்கும் குறிப்பேடு கிராமத்தில் அருகருகே நிலம் உள்ளது. நிலப் பிரச்னை தொடா்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

கடந்த ஜூன் 22-ஆம் தேதி நிலப் பிரச்னை தொடா்பாக மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த கிருஷ்ணன், இவரது மனைவி புவனேஸ்வரி, மோகன் ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் மோகன், பரிமளா, கீா்த்திவாசன், மதியழகன், துரை, விக்னேஷ் ஆகியோா் மீதும், மோகன் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணன், புவனேஸ்வரி, மணிமேகலை, ஆனந்தன் ஆகியோா் மீதும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.