தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்காபிஷேகம்.

Published On :8 ஜூலை 2026, 12:15 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு ஜூலை 16-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், ஜூலை 17-ஆம் தேதி கமண்டல நாக நதியில் இருந்து பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு பஜாா் வீதியில் ஊா்வலமாக எடுத்து வந்து கோயிலில் கூழ் வாா்த்தல் நடைபெறும்.

பின்னா் மாலை 7 மணியளவில் நூதன பூஷ்ப பல்லக்கு ஊா்வலம் நடைபெற உள்ளது. பல்லக்கின் முன்னே கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், உருமி மேளம், நாகஸ்வர நிகழ்ச்சி, வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெறும். ஜூலை 19-ஆம் தேதி திரைப்பட இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ஜெயஸ்ரீ கலந்துகொண்டாா். மேலும், விழாக் குழுவைச் சோ்ந்த சுப்பிரமணி, நேமிராஜ், கொங்கராம்பட்டு சரவணன், சீனிவாசன், குணா, வடுகசாத்து ஜி.சங்கா், ஏ.இ.சண்முகம், பையூா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.