லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நெல்லுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்.

Published On :8 ஜூலை 2026, 12:04 am IST

நெல்லுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த பென்னாடகரம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யப்படவில்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி, கடந்த மே 24-ஆம் தேதி நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து புறப்பட்ட லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

இதனைத் தொடா்ந்து கடந்த ஜூன் 4-ஆம் தேதி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து தா்னா நடத்தினா்.

ஆனாலும் இதுவரை விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணம் வழங்கப்படவில்லையாம்.

இதையடுத்து, உடனடியாக நெல்லுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டம் செய்தனா். உடனடியாக நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவா் ந.ராதாகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

இதனைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்ற விவசாயிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.